கரூர் பசுபதிபாளையம் உயர்மட்ட பாலத்தை சுற்றிலும் முட்செடிகள்

கரூர், ஜன. 4: கரூர் நகராட்சிக்குட்பட்ட ஐந்து ரோடு பசுபதிபாளையம் இடையே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டன. அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்போது பசுபதிபாளையம் ஐந்து ரோடு இடையிலான உயர்மட்ட பாலத்தை சுற்றிலும் அதிகளவு சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன. ஆற்றின் போக்கையும், நிலத்தடி நீர் மட்டத்தையும் வெகுவாக பாதிக்கும் என்பதால் இந்த முட்செடிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>