வீரபாண்டிய கட்டபொம்மன் 262வது பிறந்த நாள் விழா

கரூர், ஜன. 4: வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மனோகரா கார்னர் வரை தேவராட்டம் ஆடியவாறு அனைத்து நிர்வாகிகளும் சென்று, பின்னர் கட்டபொம்மன் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சாரதி, முத்துராஜ் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வினை தொடர்ந்து, கரூர் முத்துலாடம்பட்டியில் இந்த அமைப்பின் சார்பில் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர்களுக்கு உணவு வழங்கப்பட்டன. அய்யர்மலை அருகே சிவாயம் ஊராட்சி தேசியமங்களத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநில துணை செயலாளர் கண்ணுச்சாமி, உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>