ரமணாஸ்ரமத்தில் 141வது ஜெயந்தி விழா இளையராஜா பங்கேற்று இசை ஆராதனை

திருவண்ணாமலை, ஜன. 1: திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் 141வது ஆண்டு ரமணர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. அதில், இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். மதுரை மாவட்டம் திருச்சுழியில் கடந்த 30.12.1879 அன்று ரமணர் அவதரித்தார். பின்னர், திருவண்ணாமலையை தரிசித்து, ஞானம் பெற்று முக்தி அடைந்தார். இந்நிலையில், கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணரின் பிறந்த நட்சத்திரத்தன்று ரமண ஜெயந்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, ரமணர் அவதரித்த மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திர தினமான நேற்று ரமணரின் 141வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு ருத்ர அபிஷேகம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, தமிழ் பாராயணம் நடந்தது. விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று இசை ஆராதனை செலுத்தினார். விழாவை முன்னிட்டு ரமணாஸ்ரமம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான ரமண பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories:

>