சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து கொடுப்பது குற்றம்

வலங்கைமான், ஜன.1: சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து கொடுப்பது குற்றம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பட்டு அமைச்சகத்தின் கீழ் நாம்கோ நிறுவனம் மூலம் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு 24 மணி நேரமும் இலவசமாக செயல்பட கூடிய சைலடுலைன் 1098 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாதம் தோறும் நடத்தப் படும் திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்மாதம் வலங்கைமான் வட்டம் கோவிந்தகுடியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வலங்கைமான் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து கொடுப்பது அதிகமாக நடைபெறுவதாக திருவாரூர் சைல்டுலைன் அமைப்பிற்கு புகார் பதிவான சூழ்நிலையில், இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இந்நிழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட குழந்தை நலக்குழு தலைவர் ஜீவானந்தம் கலந்து கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் பெண் குழந்தைகள் பாலியல் துண்புறுத்தல் குறித்தும் விளக்கி பேசினார். சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன் பேசுகையில், குழந்தை தொழிலாளர், குழந்தை கொத்தடிமை, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்றவற்றிக்கு இலவச தொலைபேசி எண்ணான 1098 ஐ தொடர்பு கொள்ளலாம் என்றார்.

மேலும் ஆவூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிருத்திகா சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து கொடுப்பது குற்றமாகும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்றார். நிகழ்ச்சியில் வலங்கைமான் வலங்கைமான் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஆறுமுகம், சமூக நலத்துறை பணியாளர்கள் கிருஷ்ணம்மாள், சுசிலா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் விஜய் ஹரிஹரன், ஊராட்சி செயலர் ரமேஷ் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சைல்டுலைன் அணி உறுப்பினர் மரகதமணி நன்றி கூறினார்.

Related Stories:

>