×

கோவை கொடூர குற்றச் செயலை கண்டிக்க கடுஞ்சொல்லும் போதாதது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை : கோவை கொடூர குற்றச் செயலை கண்டிக்க கடுஞ்சொல்லும் போதாதது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Goa ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,
× RELATED ஐபிஎல் மினி ஏலம் : ஜடேஜாவிற்கு மாற்றாக...