கலெக்டர் தகவல் மகாராஷ்டிராவில் இருந்து தஞ்சைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தது

தஞ்சை, ஜன. 1: தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்துக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தது.

தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள வைப்பறையில் 3,594 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,123 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,378 வாக்காளர் சரிபார்ப்பு சீட்டு தணிக்கை இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து நேற்று 1,410 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,700 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,740 வாக்காளர் சரிபார்ப்பு சீட்டு தணிக்கை இயந்திரங்கள் வந்து சேர்ந்தன. இதையடுத்து 5,004 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,823 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,118 வாக்காளர் சரிபார்ப்பு சீட்டு தணிக்கை இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள 9 பொறியாளர்களால் கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் முதல்கட்டமாக சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை தினமும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் கோவிந்தராவ், வாக்குப்பதிவு இயந்திர கண்காணிப்பாளர் தில்லைவேல் ஆகியோர் பார்வையிட்டனர். ஆய்வின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர். அப்போது கடந்த 30ம் தேதி வரை 4,358 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,231 கட்டுப்பாட்டு இயந்திரங்களுக்கான முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ளவை சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெறும் என்று கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

Related Stories:

>