புதுகையில் தொடர் சாரல் மழை

புதுக்கோட்டை, ஜன.1: புதுக்கோட்டை அதிகாலை முதலே சூரியன் முகமே தெரியாத வகையில் வானத்தில் கருமேகக் கூட்டங்கள் நேற்று காணப்பட்டன. இதனால், குளிர்ந்த நிலையே நீடித்தது. மேலும் அவ்வப்போது சாரல் மழையும் சற்று கனமழையும் மதியம் வரை பெய்தது. நகர் பகுதிகளில் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நடந்து சென்ற பாதசாரிகள் குடை பிடித்தப்படியும், மழை கோட் அணிந்தும் சென்றதை அதிக அளவில் காணமுடிந்தது.

நகரில் பெய்து வரும் சாரல் மழையால் லாரிகளில் இருந்து காய்கறி மூட்டைகளை இறக்குவதில் தொழிலாளர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

மேலும் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட், கடைவீதியில் பொது மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Related Stories:

>