மன உளைச்சலில் விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது

புதுக்கோட்டை, ஜன. 1: 2020ம் ஆண்டு பெரும்பாளான நாட்கள் கொரோனா பிடியில் சிக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சற்று குறைந்துள்ள போதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோரி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2021 புதுவருட வரவேற்க பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கும் படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி ஓட்டல்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கும் முடிக்க வேண் டும். வெளி அரங்கில் அல்லது பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

இரு சக்கர வாகனங்களில் கூட்டமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் செல்ல கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தவிற்கும் வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டத்தை விட இந்த புத்தாண்டு சற்று களையிழந்து காணப்பட்டது.

Related Stories:

>