அம்மா மினி கிளினிக்கால் உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை

அரியலூர், ஜன.1: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டுமென புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்துதல், கூடுதல் படுக்கை வசதி, ஸ்கேன் வசதி போன்ற வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நிலை உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உட அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழ்நநாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டதிற்கு 22 அம்மா மினி கிளினிக் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் துவங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை எளிய நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இக்கிளினிக்கில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பிரியா கூறுகையில், எனது குடும்ப உறுப்பினர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகிறோம். இதன் மூலம் குடும்பம் நடத்துவதற்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டி வருகிறோம். மேலும், நான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால், சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய சமயத்தில் எங்கள் ஊரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கோ சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த சமயத்தில் மருத்துவமனை வசதியில்லாத குக்கிராமங்களிலும் 2000 மினி கிளினிக்குகள் தமிழக அரசு மூலம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல எங்களது கிராமத்திலும் மினி கிளினிக்குகள் ஆரம்பிக்கப்பட்டு என்னை போன்ற ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ அளிக்கப்பட்டு வருவது என்பதை கேள்விப்பட்டு, நானும் மினி கிளினிக் மூலம் பரிசோதனை மேற்கொண்டு வருகிறேன். இதனால் உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories:

>