×

ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

பெரம்பலூர், ஜன. 1: ஆங்கில புத்தாண்டு இன்று பிறப்பதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று காலை கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இன்று ஆங்கில புத்தாண்டு 2021ம் ஆண்டு பிறப்பையொட்டி உலகெங்கும் நேற்று நள்ளிரவு முதல் புத்தாண்டு தின சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று  இரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் 2020ம் ஆண்டு இறைவன் கொடுத்த நன்மைகளுக்கு நன்றி செலுத்தவும், புத்தாண்டில் அனைத்து நன்மைகளும் கிடைக்கவும் வேண்டி சிறப்பு திருப்பலி 11.40 மணிக்கு துவங்கி 1.30 மணி வரை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்படி பெரம்பலூர் புனித பனிமய மாதா தேவாலயம், பாளையம் கிராமத்தில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயம் மற்றும் அன்னமங்கலம், நூத்தப்பூர், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், திருவாளந்துறை, திருமாந்துறை, எறையூர், பாடாலூர், வடக்கலூர் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு, பாடல் திருப்பலி நடத்தப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் இன்று காலை 8 மணிக்கு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடக்கிறது.

இதேபோல் பெரம்பலூர் நகரில் உள்ள மதனகோபால சுவாமி கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில், செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயில், சு.ஆடுதுறை குற்றம் பொருத்தீஸ்வரர் கோயில், வெங்கனூர் விருத்தாச்சலேஷ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

Tags : churches ,
× RELATED தேசிய திருநங்கையர் தினம்: முதல்வர் வாழ்த்து