×

வேளாங்கண்ணி கடற்கரையில் கூடியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

நாகை, ஜன.1: ஊரடங்கு உத்தரவின் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் கூடுவோர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடநத மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டம் மற்றும் கடற்கரைகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவது ஆகியவைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டம் நாகை மாவட்டத்தில் நடத்தப்படவில்லை.

மேலும் நேற்று (31ம் தேதி), இன்று (1ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூட கலெக்டர் பிரவீன்பிநாயர் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடற்கரையில் கூடினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர காவல் குழும போலிசார் மற்றும் உள்ளூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கடற்கரையில் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று கூறி எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர். அதே போல் நாகையில் உள்ள புதிய கடற்கரைக்கு வந்த குடும்பத்தோடு வந்தவர்களையும் போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

Tags : Velankanni ,beach ,
× RELATED ஈஸ்டர் சண்டே விழாவில் பங்கேற்க...