×

புறவழிச்சாலைக்கு அமைக்க நிலம் கையகம் நில உரிமையாளர்கள் இழப்பீட்டு தொகை பெற அழைப்பு கரைக்கால் துணை கலெக்டர் அறிவிப்பு

காரைக்கால்,ஜன.1: புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக நில உரிமையாளர்கள் இழப்பீட்டு தொகை பெறலாம் என காரைக்கால் துணை கலெக்டர் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் (வருவாய் மற்றும் நில கையகப்படுத்தல் அதிகாரி) ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்காக காரைக்கால் மாவட்டம் தலத்தெரு, கோவில்பத்து, காரைக்கால், தருமபுரம், ஓடுதுறை, அக்கரைவட்டம் மற்றும் நிரவி வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான இழப்பீட்டு தொகை நில கையகப்படுத்தும் சட்டத்தின்படி கணக்கிடடு பணம் வழங்கப்பட்டது. தற்போது, சென்னை உயர்நீதி மன்றம் ரிட் மனு வழங்கிய தீர்ப்பின அடிப்படையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல், மறு வாய்ப்பளிப்பு மற்றும் மறுகுடியமர்வில் நேரிய சரியீடு மற்றும் வெளிப்படை தன்மை உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இழப்பீட்டுத் தொகையாக ரூ.3கோடியே 10லட்சத்து 25 ஆயிரத்து 771ஐ 11 நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இழப்பீட்டு தொகை பெறாத நில உரிமையாளர்கள் மற்றும் நில பாத்தியதையுள்ளவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களுக்கான இழப்பீட்டு தொகையை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Deputy Collector ,Coast ,landowners ,
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்