×

உதயநிதி பிறந்த நாளையொட்டி ஆயிரப்பேரியில் கிரிக்கெட் போட்டி

தென்காசி, ஜன. 1: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரப்பேரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. முதல் போட்டியை மாநில வர்த்தகர் அணி துணை தலைவர்அய்யாத்துரை பாண்டியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமையா என்ற துரை, ரவிசங்கர், பொன் முத்தையாபாண்டியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காசிதர்மம் துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹக்கீம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ரத்தினசாமி, பேச்சாளர் முத்துசாமி, பேரூர் செயலாளர்கள் சுடலை, முத்தையா, மாரியப்பன், சுரண்டை பேரூர் துணை  செயலாளர் பூல்பாண்டியன், பொருளாளர் ஜெயராஜ், கடையநல்லூர் நகர முன்னாள் செயலாளர் முகம்மது அலி, மாவட்ட சிறுபான்மை அணி முன்னாள் துணை அமைப்பாளர் இஸ்மாயில், மாவட்ட வர்த்தகர் அணி முன்னாள் அமைப்பாளர் முத்துக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அருணா, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பூலோக ராஜ், ஓய்வுபெற்ற எஸ்ஐ பழனிசாமி, காளிராஜ், ஸ்டீபன் சத்யராஜ், ரமேஷ் உட்பட கலந்து கொண்டனர். போட்டிகள் வருகிற 13ம் தேதி வரை நடக்கிறது.

Tags : Cricket match ,eve ,birthday ,Udayanidhi ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்