×

சிவகாசி தாலுகாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுகள் தயார்

சிவகாசி. ஜன. 1:  சிவகாசி தாலுகா பகுதியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை உள்பட பொங்கல் பொருட்கள் மற்றும் ரூ.2,500 பணம் வழங்கப்பட உள்ளது. தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தை பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு, முந்திரி, உலர் திராட்சை உள்பட பொங்கல் பொருட்கள் மற்றும் ரூ.2,500 பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் ஒருசில தினங்களில் பொங்கல் பரிசுகள் வழங்கும் பணியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைக்கிறார். சிவகாசி தாலுகாவில் உள்ள 142 முழுநேர ரேஷன் கடைகளில் 1 லட்சத்து ஆயிரத்து 31 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுகள், ரூ.2,500 பணம் வழங்கப்பட உள்ளது.. சிவகாசி தாசில்தார் வெங்கடேசன் உத்தரவின் பேரில் தற்போது பொங்கல் பரிசுகள் அந்தந்த ரேஷன் கடைகள் வாரியாக பிரித்து அனுப்பும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஒவ்வொறு ரேஷன் கடைகளிலும் தினமும் 200 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்டுகள் விபரம் ஒவ்வொறு ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகையில் எழுதி வைக்கப்படும். தகவல் பலகையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் மட்டும் வரிசையில் நின்று பொங்கல் பரிசுகளை பெற்று கொள்ள வேண்டும். பொங்கலுக்குள் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு வரும் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுகள் வழங்கப்படும்’ என்றார்.

Tags : taluka ,Sivakasi ,
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...