நெல்கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு, ஜன.1: வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வத்திராயிருப்பில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை உடனே செயல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ ராமசாமி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் கோவிந்தன், தாலுகா துணைச்செயலாளர் மகாலிங்கம், பெரியகுளம் விவசாய சங்கத்தலைவர் முருகன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சௌந்திரபாண்டியன், அனுப்பங்குளம் விவசாய சங்கத்தலைவர் சுந்தரம், வில்வராயன் குளம் விவசாயி பொன்னையா, இந்திய கம்யூனிஸ்ட் நகர துணை செயலாளர்கள் மாரிமுத்து, காளீஸ்வரன், விவசாய சங்கத்தை சேர்ந்த பாண்டி, மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>