×

மாவட்ட கூடைப்பந்து போட்டி பெரியகுளம் அணி சாம்பியன்

பெரியகுளம், ஜன.1: பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் (கிரீன்ஸ்) சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. பெரியகுளம் துரைராம சிதம்பரம் விளையாட்டரங்கில் நாக்அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்ற போட்டிகளில் தேனி, போடி. கூடலூர், வடுகபட்டி, பெரியகுளம் ஆகிய ஊர்களிலிருந்து பல்வேறு அணிகள் விளையாடின. இறுதி போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் கிரீன்ஸ் அணியும் மோதின. இதில் 61-49 என்ற புள்ளி கணக்கில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. கிரீன்ஸ் அணி இரண்டாம் இடம் பெற்றது. 3வது மற்றும் 4வது இடத்திற்கான போட்டியில் கூடலூர் கூடைப்பந்து அணி 98- 81 என்ற கணக்கில் போடி கூடைப்பந்து கழக அணியை வென்றது.        பரிசளிப்பு விழாவில் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி செயலாளர் சிதம்பரசூரியவேலு வரவேற்று பேசினார். உலக பிபா கமிஷனர் தனபால் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு விளையாட்டு துறை முன்னாள் சீனியர் மேலாளர் சுப்புராஜ் பரிசுகள் வழங்கினார். பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் பொருளாளர் டாக்டர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags : District Basketball Tournament Periyakulam Team Champion ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு