×

கண்மாய் நீரை குளத்திற்கு எடுக்க எதிர்ப்பு வருவாய்த்துறையை கண்டித்து சாலை மறியலால் பரபரப்பு

இளையான்குடி, ஜன.1: இளையான்குடி அருகே குடிநீருக்காக, கண்மாய் தண்ணீரை பாய்ச்சுவதில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி அருகே அளவிடங்கானில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் வடகிழக்கு பருவமழையால், தற்போது ஓரளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் அளவிடங்கான் பஸ் ஸ்டாப் அருகே உள்ள குடிநீர் குளம் உள்ளது. இந்த குடிநீர் குளத்தில் மழை காலத்தில் தண்ணீரை பெருக்கி, குடிநீருக்காகவும், காவிரி கூட்டு குடிநீர், மற்றும் தண்ணீர் இல்லாத கோடை காலத்தில் இதர பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இந்த பகுதியில் பெய்த தொடர் மழையால், அளவிடங்கான் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதை பயன்படுத்தி அப்பகுதியை சேர்ந்தவர்கள், அளவிடங்கான் கண்மாயிலிருந்து தண்ணீரை, குடிநீர் குளத்திற்கு டியூப் மூலம் கொண்டு வந்துள்ளனர். அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் இளையான்குடி தாலுகா ஆபிசில் புகார் அளித்துள்ளனர். அதனால், கண்மாயிலிருந்து தண்ணீரை பாய்ச்ச கூடாது என, வருவாய்த்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அளவிடங்கான் கிராமமக்கள், இளையான்குடி வருவாய்த் துறையினரையும், புகார் அளித்தவர்களையும் கன்டித்து. நேற்று மாலை வண்டல், ஆனந்தூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று, இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை மூலம் முடிவு எடுப்பதாக கூறியதன் மூலம், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : department ,pond ,Kanmai ,
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாயில்...