முப்பெரும் விழா

தேவகோட்டை, ஜன.1: மகாகவி பிறந்தநாள் விழா, விடுதலை வீரர் கே.எம்.எஸ். நினைவு நாள், சிந்தனைச் சோலையின் 5ம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா தேவகோட்டையில் நடந்தது. நிறுவனர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் தனசேகரன் வரவேற்றார். தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பழனி ராகுலதாசன் பேசினார். பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர் வெற்றிக்குப் பெரிதும் துணை நிற்பது

அர்ச்சுணனின் வில்லாற்றலா? பாஞ்சாலியின் சொல்லாற்றலா? என்ற தலைப்பில் பட்டிமண்றம் நடந்தது. கவிஞர் கார்மேகம் நடுவராக இருந்தார். அர்ச்சுணனின் வில்லாற்றலே என்ற தலைப்பில் ஆசிரியர் அன்பரசன், வழக்கறிஞர் மணிபாரதி பேசினர். பாஞ்சாலியின் சொல்லாற்றலே என்ற தலைப்பில் ஆசிரியர் ரவிச்சந்திரன், பேராசிரியர் ஞானப்பிரகாசம் பேசினர். இறுதியில் பாஞ்சாலியின் சொல்லாற்றலே என்று தீர்ப்பு வழங்கினர். செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

Related Stories:

>