பிடிஓ தற்கொலை முயற்சி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜன.1:  சிவகங்கையில் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடந்த 28ம் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் ரமேஷ் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்டத்தில் 13 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 385 மையங்களில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் பொருளாளர் அருணகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்புவனத்தில் வட்டார தலைவர் கார்த்திக் தலைமையில், மாநில செயலாளர் செல்வக்குமார் கண்டன உரையாற்றினார்.

திருப்பத்தூரில் வட்டார செயலாளர் பெரியசாமி, சிங்கம்புணரியில் மாவட்டத்தலைவர் பிரபாகரன், எஸ்.புதூரில் மாவட்ட துணைத்தலைவர் குமரேசன், மானாமதுரையில் வட்டாரத் தலைவர் செந்தில்குமார், இளையான்குடியில் வட்டார செயலாளர் மாரிமுத்து, காளையார்கோவிலில் மாவட்ட தணிக்கையாளர் குணசேகரன், கல்லலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், சாக்கோட்டையில் வட்டாரத் தலைவர் மணிமாறன், கண்ணங்குடியில் மாவட்ட இணை செயலாளர் செந்தில் பெரியசாமி, தேவகோட்டையில் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், சிவகங்கையில் மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories:

More
>