×

தொடர் மழையால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

பரமக்குடி, ஜன.1:  பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து பெய்துவரும் இந்த மழையால் சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் பொதுவக்குடி,தெளிச்சதநல்லூர் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சூழ்ந்து கிடக்கும் தண்ணீரை கடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நயினார்கோவில் மற்றும் பரமக்குடி ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில், ஏற்கனவே புரவி புயல் மழையால் மிளகாய் மற்றும் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், தற்போது, மீண்டும் மழை பெய்து வருவது விவசாயிகளிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வயல்களில் பெய்து வரும் மழையால் மேட்டுப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியிலும், தாழ்வுப் பகுதி விவசாயிகள் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பயிர்கள் மூழ்கி விட்டது என சோகத்திலும் உள்ளனர். பொதுமக்களை மாலை நேரத்தில் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், அதிகாலையில் பனி மூட்டாக உள்ளது. இதனால் மக்கள் அதிக நேரம் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

Tags : houses ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...