கமுதி அருகே அபிராமத்தில் தீப்பந்தம் ஏந்தி காங். ஆர்ப்பாட்டம்

கமுதி, ஜன.1: கமுதி அருகே அபிராமத்தில் இளைஞர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை கூட்டக் கோரி, கமுதி அருகே அபிராமம் பேருந்து நிலையம் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சரவண காந்தி தலைமை வகித்தார். பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் அபிராமம் சுரேஷ், நகர் தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் காசி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் நீலமேகம், வட்டார தலைவர்கள் அருண்பாண்டியன், வெங்கடேஸ்வரன், புவனேஸ்வரன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: