சனிக்கிழமைகளிலும் இனி வரிவசூல் மையம் இயங்கும் திருமங்கலம் நகராட்சி அறிவிப்பு

திருமங்கலம், ஜன.1: திருமங்கலம் நகராட்சியில் வீட்டுவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வரிகளை செலுத்த வசதியாக இந்த மாதம் முதல் சனிக்கிழமைகளில் வசூல்மையம் இயங்கும் என அறிவிக்கப்பட்டு–்ள்ளது. மதுரை திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்ததாவது: நகராட்சியில் வரிவசூல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது வீட்டுவரி, குடிநீர்வரி உள்ளிட்ட வரிகளை விரைவில் செலுத்தும் வகையில் இந்த மாதம் முதல் சனிக்கிழமைகளிலும் நகராட்சி அலுவலகத்திலுள்ள வரிவசூல் மையம் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரையில் இயங்கும். இதுவரையில் சுமார் 40 சதவீத வரிகள் வசூலாகியுள்ளன. பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரிவசூல்களை உரிய காலத்தில் செலுத்தும்படி கேட்டுகொள்கிறோம். மேலும் நகர் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து செல்லவேண்டும். சமீபகாலமாக பலர் முகக்கவசங்கள் அணியாமல் வெளியே நடமாடுகின்றனர். தொற்றுகாலமாக இருப்பதால் முகக்கவசங்கள் அவசியம். இதே போல் சமூக இடைவெளிவிட்டு பணிகளை செய்து நகராட்சிக்கும் அரசுக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

Related Stories:

>