திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான 7 பேருக்கு குண்டாஸ்

திண்டுக்கல், ஜன. 1: திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  திண்டுக்கல்- நத்தம் சாலை ராதாராஜ் நகரில் சரவணக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ரெங்கசமுத்திரபட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (31), செந்தூரியன் (21) கைது செய்யப்பட்டனர். அதேபோல் திண்டுக்கல் கோவிந்தாபுரம் மயானத்தில் பள்ளி மேலாளர் மணிகண்டன் கொலை வழக்கில் சிவகுமார் என்ற கோச்சா பாய் (21), திண்டுக்கல் பாரதிபுரம் அருகே செல்வகுமார் கொலை வழக்கில் சபரிநாதன் (23), ரஸ்புதீன் என்ற ரஸ்தகீர் (28), வாஹித் (22), அய்யனார் (24) கைது செய்யப்பட்டனர். இவர்கள் 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்பி ரவளிபிரியா கலெக்டர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில் 7 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

>