திண்டுக்கல் மாவட்டத்தில் குவியும் வடமாநில தொழிலாளர்கள் முறையான பரிசோதனை செய்யப்படுகிறதா?

திண்டுக்கல், ஜன. 1:  திண்டுக்கல் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் குவிய துவங்கியுள்ளனர். இவர்களுக்கு முறையான கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு, வேடசந்தூர் பகுதிகளில் நூற்பாலைகள் அதிகம் உள்ளன. கடந்த கொரோனா காலத்தில் இங்கு பணியாற்றிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வெறியேற்றப்பட்டனர். தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளால் வடமாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். வடமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் வந்து இறங்கி வருகின்றனர். இவர்களுக்கு முறைப்படி பரிசோதனை செய்யப்படுகிறதா என தெரியவில்லை. இதனால் கொரோனா தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பரிசோதனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>