×

இங்கிலாந்திலிருந்து திருப்பூர் திரும்பிய 31 பேருக்கு கொரோனா இல்லை

திருப்பூர், ஜன. 1: இங்கிலாந்து சென்று திருப்பூர் திரும்பிய 20 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரசில் உருமாற்றம் ஏற்பட்டு புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது.  இது ஏற்கனவே இருக்கும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவுவதாக  கூறப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்று வந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இங்கிலாந்து சென்று வந்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி 9ம் தேதி முதல் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 31 பேர் இங்கிலாந்து சென்று திரும்பியதை சுகாதாரத்துறையினர் அறிந்தனர். இதையடுத்து இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் 31 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரிய வந்தது. இதில் 20 ஆண்கள், 6 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் அடங்குவர்.


Tags : 31 ,Tirupur ,UK ,
× RELATED பெண்ணிடம் நகை பறிப்பு