×

மாரியம்மன் கோயில்களில் கம்பம் பிடுங்கும் விழா

ஈரோடு, ஜன.1: ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன், பெரியவலசு எம்.ஜி.ஆர்.காலனியில் உள்ள முத்து மாரியம்மன் ஆகிய கோயில்களில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டு விழா துவங்கப்பட்டது. இதையடுத்து, இரு கோயில்களிலும் தினமும் பக்தர்கள், கம்பங்களுக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். நேற்று கம்பம் பிடுங்கும் விழா நடந்தது. இதையொட்டி, கம்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயிலில் கம்பம் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக தெப்பக்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வழிபாடு நடத்தப்பட்டு தெப்பக்குளத்தில் கம்பம் விடப்பட்டது.  இதேபோல் முத்து மாரியம்மன் கோயிலின் கம்பம் மாணிக்கம்பாளையம் ஊர் கிணற்றுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று விடப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : ceremony ,Mariamman temples ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா