×

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் சிறந்தது: அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேட்டி

தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில்  உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாடு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் ஆகியன இணைந்து, தமிழும், தமிழ் மருத்துவமும் என்ற தலைப்பில், சித்தர் திருநாள்  விழாவினை நேற்று நடத்தியது.
இதில், அமைச்சர் மாபா பாண்டியராஜன், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் தங்க காமராசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி உட்பட பலர்  பங்கேற்றனர். இதில் தனித்தமிழ் சொற்களுடன் தமிழ் மருத்துவ சொற்களை இணைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சொற்குவை உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,‘‘கபசுர குடிநீரின் மருத்துவ குணம் குறித்து, உலகிலேயே தலைசிறந்த மருத்துவ இதழான லேன்செட் இதழில் செய்தி வெளியாகி  உள்ளது.

இது இந்திய மருத்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும். சொற்குவை திட்டத்தால், 2019ம் ஆண்டு முதல் 3.90 லட்சத்திற்கும் மேற்பட்ட தனித்தமிழ் சொற்கள் உருவாகி உள்ளன. இத்திட்டத்தின் மூலம், கல்லூரி மாணவர்களை  ஊக்குவிக்க 10 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட சிறந்தது. அதில், அறிவு மற்றும் திறன் சார்ந்த கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.

Tags : Tamil Nadu ,Mappa Pandiyarajan ,CBSE ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...