×

புனித சவேரியார் பொறியியல் கல்லூரி சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திங்கள்சந்தை, நவ. 1: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி சுங்கான்கடையில் புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். முன்னதாக கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் மகேஸ்வரன் மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கத்தை எடுத்துரைத்தார். கன்னியாகுமரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கண்காணிப்பாளர் சிவசங்கரி முன்மொழிய மாணவர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வில் கண்காணிப்பாளர் ரமா, காவலர்கள் மற்றும் பணியாளர்கள், புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் கிறிஸ்டஸ் ஜெயசிங், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஷீன் குமார், மக்கள் தொடர்பு அதிகாரி ஜஸ்டின் திரவியம், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Anti-Corruption Awareness Rally ,St. Xavier's College of Engineering ,Anti-Corruption Awareness Week ,St. Xavier's Catholic College of Engineering ,Sungankada ,Dr.… ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்