திமுக மக்கள் சபை கூட்டம்

திருவள்ளூர்:  கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மோ.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் எம்எல்ஏ  வி.ஜி.ராஜேந்திரன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் சரியாக நிறைவேற்றப்படுவதில்லை, பாரதி நகர் பகுதியில் சாலையை சீரமைத்து தர கோரியும், பேரம்பாக்கம்  காலனியில் குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரியும், முதியோர் உதவித்தொகை பெற்று தரவும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது எம்எல்ஏ  திமுக ஆட்சி அமைந்ததும் குறைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்றார்.

Related Stories:

>