மோடியை எதிர்க்கும் துணிச்சல் மு.க.ஸ்டாலினை தவிர யாருக்கும் இல்லை: காங்கிரஸ் தேசிய செயலாளர் விஸ்வநாதன் பேட்டி

திருக்கழுக்குன்றம்: மோடியை எதிர்க்கும் துணிச்சல், இந்திய அரசியலில் மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இல்லை என தேசிய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் கூறினார். தேசிய காங்கிரஸ் செயலாளராக எம்பி விஸ்வநாதன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.இதையொட்டி, கல்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி, அம்பேத்கர், காந்தி ஆகிய சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர்,  செய்தியாளர்களிடம் கூறியதாவது.வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியும், ஸ்டாலினை முதல்வராக்க விரும்புகிறது.  ஏனென்றால், தென் மாநிலத்தில் மோடியை எதிர்க்கும் துணிச்சல், திராணி மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஆண்மகன் இந்திய அரசியலில் மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லை. மு.க.ஸ்டாலின் தான் தன்னந்தனியாக மோடியை  எதிர்க்கும் சிங்கக்குட்டியாக இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரப்போகிறார் என்பதில் மக்கள் தீர்மானமாகவே முடிவெடுத்துள்ளனர். அகில இந்திய காங்கிரசின் செயலாளராகிய நான் என்னுடைய கருத்தாகவும் இதை தெரிவிக்கிறேன். டெல்லியில், விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை ஏறத்தாழ 34 விவசாயிகள் இறந்துள்ளனர்.  மோடிக்கு விவசாயியை பற்றியும், விவசாயத்தை பற்றியும் தெரிய வேண்டும். ஆனால், இவை இரண்டும் அவருக்கு தெரியாது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, விவசாய சங்க தலைவர்களை நேரில் அழைத்து பேசினார். ரஜினி எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம் என்றார். அவருடன், புதுப்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பக்கீர்முகமது, கிங்உசேன், நிர்வாகிகள் ஷெரீப், பாண்டியன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

>