×

நேற்று காலை முதல் மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில், நேற்று காலை திடீரென பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால், மாமல்லபுரம் குப்பம், தேவனேரி,  கொக்கிலமேடு குப்பம், வெண்புருஷம், புதிய கல்பாக்கம், புதுஎடையூர்குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற ஒரு சில மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்ததால், அவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

கடல் சீற்றம் காரணமாக, சுமார் 5 அடி உயரத்துக்கு, கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கரைக்கு சுற்றி பார்க்க வந்த ஒரு சில சுற்றுலா பயணிகள், சீறிபாயும் அலைகளை ஆச்சரியத்துடன் பார்த்தனர். குறிப்பாக, 10 அடி உயரத்துக்கு ராட்சத அலை கரைப்பகுதி வரை நோக்கி வந்தன. மாமல்லபுரம் கடற்கரையில் மணிக்கு 30 கிமீ வேகத்தில் மிதமான காற்று வீசியது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘அடிக்கடி புயல், கடல் சீற்றம்  போன்றவற்றால் இயற்கை பேரிடரால் எங்கள் இயல்பு  வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றனர்.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ