×

தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் சி.த.செல்லபாண்டியன், சின்னத்துரை பங்கேற்பு

தூத்துக்குடி, டிச.31: தூத்துக்குடியில் அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தூத்துக்குடி சிதம்பரநகரிலுள்ள அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன் அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளரும், ஆவின் சேர்மனுமான என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பேசிய நிர்வாகிகள், சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் முன்னாள் அமைச்சரான செல்லப்பாண்டியனுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கிடவேண்டும். இல்லாதபட்சத்தில், இது தொடர்பாக வரும் 2ம்தேதி தூத்துக்குடியிலுள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுப்பது என்பது குறித்தும் விவாதித்தனர்.

இதில், முன்னாள் அவைத்தலைவர் அமலிராஜன், முன்னாள் பொருளாளர் ஜெபமாலை, தலைமை பேச்சாளர் கருணாநிதி, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராஜகோபால், முன்னாள் யூனியன் சேர்மன் தளபதிபிச்சையா, பகுதிச் செயலாளர்கள் சேவியர், முருகன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், தூத்துக்குடி ஜோதிமணி, வைகுண்டம் ஆறுமுகநயினார், காயல் அன்வர்ராஜா, செய்யதுஇப்ராகிம், மீனவரணி ஜோசப், துரைப்பாண்டியன், ஒன்றிய இளைஞரணி லிங்ககுமார், அறிவுடைநம்பி, வக்கீல் ராஜாராம், கானம் மாதவசிங், ராஜாமகாதேவன், அரசகுரு, செல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,meeting ,Thoothukudi ,Chinnathurai ,C.T.Sellapandian ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...