×

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் கோவில்பட்டியில் வீரர்களுக்கு எஸ்பி வரவேற்பு

கோவில்பட்டி, டிச. 31: இந்தியாவின் முதல் பாரா சைக்கிள் ஓட்டுநரும், லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உரிமையாளருமான ஆதித்யா மேத்தாவின் தலைமையில், நாட்டின் சிறந்த பாரா சைக்கிள் ஓட்டுநர்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு “இன்பினிட்டி 2020”யின் ஒரு பகுதியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நகரின் டால் ஏரியில் இருந்து கடந்த நவ.18ம்தேதி தொடங்கிய சைக்கிள் பயணம் மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக இன்று 31ம்தேதி 3842 கிமீ கடந்து கன்னியாகுமரியில் முடிவடைகிறது. நேற்று கோவில்பட்டிக்கு வந்த சைக்கிள் வீரர்களுக்கு வில்லிசேரி சந்திப்பில் எஸ்பி ஜெயக்குமார் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை வீரர் மாதவன் கூறுகையில், ‘பாரா ஸ்போர்ட்சை ஊக்குவிக்கவும், நாட்டில் திறமையானவர்களை கண்டறிந்து வெளிக்கொணரவும் மாற்றுத்திறனாளிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாரா சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளோம்’ என்றார்.

Tags : Bicycle ride ,Kashmir ,Kanyakumari SP ,Kovilpatti ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...