காயல்பட்டினம் அம்மன் கோயில்களில் திருவிளக்கு பூஜை

ஆறுமுகநேரி, டிச.31: காயல்பட்டினத்தில் உள்ள அம்மன் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதனை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மகன் ஆனந்தமகேஷ்வரன் துவக்கி வைத்தார்.  காயல்பட்டினம் லெட்சுமிபுரம் உச்சினிமாகாளியம்மன் கோயில், பைபாஸ் சாலையில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோயில்களில் நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட திமுக பொறுபாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மகன் ஆனந்தமகேஷ்வரன் பங்கேற்று திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். இதில் நகர செயலாளர் முத்துமுகமது, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகமது அலிஜின்னா, முன்னாள் கவுன்சிலர் சுகு, நகர துணை செயலாளர் கதிரவன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு ராஜ்குமார், கன்னிமுத்து உட்பட பலர்

பங்கேற்றனர்.

Related Stories:

>