தெற்கு கள்ளிகுளம் ஜி.எம் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

வள்ளியூர், டிச. 31:  தெற்கு கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனையில் சமாரியன் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை செயலாளர் ஜோசப் பெல்சி வரவேற்றார். பங்குத்தந்தை தேவராஜன் ஆசி வழங்கினார்.  பங்குத்தந்தைகள் ஜெபஸ்டின் செபம் செய்ய, ஜெரால்டு ரவி கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர் மரிய சிலுவை கிரீபின் மற்றும் செல்வ கணேஷ் தொகுத்து வழங்கினர். இதையடுத்து 70 பேருக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன.அத்துடன் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதையடுத்து சிறப்பு விருந்தினர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களுக்கு மொபைல் போன்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சமாரியன் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ெசய்திருந்தனர்.

Related Stories:

>