சாலை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.31: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி மன்னார்புரம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், இந்திய அரசியல் சாசனம் வரையறுத்துள்ள விதிகளை மீற வேண்டாம். முதன்மை இயக்குநர் பணியிடத்திற்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். கோரிக்கைகளை கிடப்பில் போடுவது மற்றும் தொழிற்சங்க விரோதபோக்கை கடைபிடிக்கும் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர், தலைமை பொறியாளரை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>