அம்மன் டிஆர்ஒய் ஸ்டீல் நிறுவனம் சார்பில் இலக்கை அடைந்த வாடிக்கையாளர்களுக்கு பரிசளிப்பு விழா

திருச்சி, டிச.31: திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது அம்மன் டிஆர்ஒய் ஸ்டீல் (பி) லிமிடெட் நிறுவனம். தமிழகம் முழுவதும் சுமார் 350 அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு சிறந்த கம்பி அம்மன் டிஆர்ஒய் கம்பிகள் என இன்ஜினியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவராலும் விரும்பி வாங்கப்பட்டு வருகிறது. தற்போது அம்மன் டிஆர்ஒய் ஸ்டீல் நிறுவனம் சார்பில் 6 மாதத்திற்கான இன்ஜினியர்ஸ், கான்ட்ராக்டர்ஸ், பில்டர்ஸ், பார்பெண்டர்களுக்கு சிறப்பு பரிசு திட்டத்தினை அறிமுகப்படுத்தி இதன் மூலம் அதிக எடையில் அம்மன் டிஆர்ஒய் கம்பிகளை வாங்கி இலக்கினை அடைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகின்றனர். அதன்படி 5 டன் அம்மன் டிஆர்ஒய் கம்பி வாங்குபவர்களுக்கு 20 கிராம் வெள்ளி நாணயம், 10 டன்னிற்கு மிக்சி, 15 டன்னிற்கு 1 கிராம் தங்க நாணயம், 20 டன்னிற்கு ஸ்மார்ட் போன், 25 டன்னிற்கு ஹோம் தியேட்டர், 50 டன்னிற்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி, 75 டன்னிற்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.இதில் இன்ஜினியர்ஸ், கான்ட்ராக்டர்ஸ், பில்டர்ஸ், பார்பெண்டர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கான சிறப்பு பரிசளிப்பு விழா திருச்சி ரம்யாஸ் ஓட்டலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இதில் இலக்கை அடைந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு அம்மன் டிஆர்ஒய் நிறுவனம் சார்பில் முருகானந்தம் (விபி பைனான்ஸ்) பரிசு வழங்கினார். இதில் சாமிநாதன் (அனுப்புகை மேலாளர்), மூத்த விற்பனை அதிகாரி பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories:

>