×

திருச்சியில் வழங்கப்பட்டது திருச்சி பொன்மலை பணிமனையில் தாது பொருட்களை கையாளும் சரக்கு வேகன்கள் தயாரித்து அனுப்பி வைப்பு

திருச்சி, டிச.31: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை டீசல் எலக்ட்ரிக்கல் மற்றும் கோச் ஆகியவற்றின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் முதன்மையானதாக இருந்து வருகிறது. இந்தியாவில் வேகன் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் 4 ரயில்வே பணிமனைகளில் பொன்மலையும் ஒன்றாகும். இதனால் இந்தியாவில் சரக்கு சேவை மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்படும் பாக்ஸ்னில் வகை வேகன்கள், சுரங்கத்தில் பெறப்படும் நிலக்கரி மற்றும் பல்வேறு தாது பொருட்களை கையாள பயன்படுத்தப்படுகிறது. மேலும், பிவிசிஎம் வகை கார்டு வேன்கள் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தாண்டு ஏப்ரல் முதல் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வு மூலம் மே மாதம் முதல் பணிகள் துவங்கப்பட்டு ஜூன் மாதம் முழு அளவில் உற்பத்தி துவங்கியது.இதில் ரயில்வே வாரியத்தின் இருப்புப்பாதை இயங்கு வண்டிக்கான செயல்முறை திட்டத்தின் கீழ் பொன்மலை பணிமனையில் 250வது வேகன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 188 உயர் கனரக சரக்கு வேகன்களும் 62 கார்டு வேகன்களும் அடங்கும். மேலும் பொன்மலை பணிமனையில் வரலாற்றில் முதன்முறையாக 100 பிவிசிஎம் வேகன்கள் உற்பத்தி இலக்கை எட்டியுள்ளது. இதில் 250வது பாக்ஸ்னில் வகை வேகன் மற்றும் 100வது பிவிசிஎம் வகை வேகன் ஆகியவற்றை முதன்மை பணிமனை மேலாளர் சியாமதர்ராம் நேற்று கொடியசைத்து வைத்து வழியனுப்பி வைத்தார். அப்போது உதவி தலைமை இயந்திரவியல் பொறியாளர் கிளமெண்ட் பர்ணபாஸ், வேகன் உற்பத்தி பணி மேலாளர் பியூஸ்குமார் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags : Trichy ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்