ஆதனூர் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம்

நீடாமங்கலம், டிச.31: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி பெரியார் சமத்துவ புரத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஊராட்சி கிளை நிர்வாகிககள் பாஸ்கர், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணிசேகர், ஒன்றிய குழு உறுப்பினர் நடனசிகாமணி, இளைஞரணி ஆனந்து, மாணவர் அணி ராயபுரம் பிரகாஷ், ராசப்பையன்சாவடி விக்னேஷ், தகவல் தொழில் நுட்ப அணி கோவில்வெண்ணி செல்வா, மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஊள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சமத்துவபுரம் கிளை செயலாளர் ராஜ் குட்டி நன்றி கூறினார்.

Related Stories:

>