×

தென்னை நாற்றங்கால் பண்ணையில் ஆராய்ச்சி நிலைய வல்லுநர்கள் ஆய்வு

மன்னார்குடி, டிச. 31: திருவாரூர் மாவட்டம் வடுவூர் தென்பாதி கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளா ண்மை துறையில் குட்டை, நெட்டை வீரிய ஒட்டு தென்னை நாற்றங்கால் பண்ணை சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பண்ணையில் குட்டை, நெட்டை தென்னங் கன்றுகள் உற்பத்திக்கென அமைக்கப்பட்ட பிரத்யேக பண்ணையாகும். குட்டை, நெட்டை தென்னங்கன்றுகள் மற்ற ரகங்களை விட அதிகளவில் விளைச்சல் தரக்கூடியது. மேலும், இத்தகைய தென்னங்கன்றுகளின் தேவை அதிகம் இருப்பதால் தனியார் தென்னங்கன்று பண்ணைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, குறைந்த விலையில் இந்த தென்னங் கன்றுகளை விவசாயிகள் வாங்கி பயனடையும் நோக்கத்தில் ஆரம்பி க்கப்பட்டு இங்கு 720 குட்டை ரக கன்றுகளும், 185 நெட்டை ரக கன்றுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தென்னங்கன்றுகள் வளர்ச்சியடைந்து பூக்கும் பருவத்தில் ஒட்டு செய்து பெறப்படும் காய்களை கொண்டு தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட உள் ளது. இந்த பண்ணையின் அனைத்து தொழிற்நுட்ப ஆலோசனைகளையும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழத்தின் வல்லுனர்களின் ஆலோசனையுடன் நேரடி கள ஆய்வில் தெரிவிக்கப்பட்டு பூச்சி மற்றும் பல்வேறு நோய்களின் இடர்பாடுகளில் இருந்து தென்னங்கன்றுகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் வடுவூர் தென்பாதி கிராமத்தில் அமைந்துள்ள பண்ணையை வேப்பங்குளம் அரசு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் பாபு, உதவி பேராசிரியர் கள் அருண்குமார், சுருளிராஜன் ஆகியோர் பார்வையிட்டு அங்கு நேரடி கள ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வின் போது வடுவூர் குட்டை, நெட்டை தென்னை நாற்றங்கால் பண்ணையின் வேளாண்மை அலுவலர் ராஜகுரு உடனிருந்தார்.

Tags : Research Station Experts Research ,Coconut Nursery Farm ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...