கல்வியில் 20% இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.31: அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி நேற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி கட்சியின் மாநில துணை செயலாளர் வேணு பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் கொரடாச்சேரியில் மாவட்ட செயலாளர் பழனி தலைமையிலும், குடவாசலில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன் தலைமையிலும், நன்னிலத்தில் ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையிலும் என மாவட்டம் முழுவதும் 10 ஊராட்சி ஒன்றியங்கள் அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது

.

மன்னார்குடி: மன்னார்குடி ஒன்றிய பாமக சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் சீனி தனபாலன் தலைமையில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட செயலாளர் வீர ராஜேந்திரன் தலைமையில் பாமக நிர்வாகிகள் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் உஷாராணியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டிஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சுப்பிரமணி அய்யர் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு கணேச கவுண்டர் , துணைச் செயலாளர் சேகர், அமைப்பு செயலாளர் மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பாமகவினர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று ஒன்றிய அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்து, ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். வலங்கைமான்: வலங்கைமானில் பாட்டாளி மக்கள் கட்சியினர் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரிடம் மனு வழங்கினர். இதில் துணைச் செயலாளர்கள் சண்முகவேல், மனோகரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பு மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>