×

திருவண்ணாமலை கோயிலில் நவ.4ம் தேதி நடை அடைப்பு

 

தி.மலை: பௌர்ணமி, அன்னாபிஷேகம் நடைபெறுவதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் நவ.4ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோயிலில் எதிர்வரும் நவ.4ம் தேதி மற்றும் நவ.5 ம் தேதிஆகிய நாட்களில் பௌர்ணமி வரவிருப்பதாலும், நவ.4ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுவதாலும், அன்று பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 06.00 மணிவரையில் நடைசாற்றப்பட்டு மீண்டும் மாலை 06.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேற்படி தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பாக்கப்படுவதால், பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும்,விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் நவ.4ம் தேதி, நவ.5ம் தேதி ஆகிய இரண்டு எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

Tags : Tiruvannamalai Temple ,Purnami ,Annabishekam ,Tiruvannamalai Arunasaleswarar Temple ,Tiruvannamalai ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!