திருவாரூரில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று

திருவாரூர், டிச.31: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 22 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 923 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் கொரோனா தொற்றால் 10,891 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திருவாரூரில் 4 , திருத்துறைப்பூண்டியில் 8 , கொரடாச்சேரியில் 3 , மன்னார்குடியில் 2 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 22 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் 10,923 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இவர்களில் 121 பேர்கள் மட்டுமே சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23 பேர், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 4 பேர், 34 பேர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

Related Stories:

>