×

மத்திய அரசை கண்டித்து சிஐடியூ தொழிற் சங்கம் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, டிச. 31: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்தங்கள் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி மன்னார்குடியில் சிஐடியூ இந்திய தொழிற் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்ட திருத்தங்கள், மின் திருத்த சட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை திரும்ப பெற வலி யுறுத்தி இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியூ சார்பில் மன்னார்குடி பந்தலடி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட துணைத்தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ மாவட்ட குழு உறுப்பினர் ஜெகதீசன், மின் உரிய மத்திய கூட்டமைப்பு சகாயம், சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் தாயுமானவன், ஆட்டோ சங்க நிர்வாகி பொன் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை கண்டித்தும், அதற்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.


Tags : CITU ,trade union protests ,government ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு