×

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஊராட்சிகளில் நிதி ஆதாரத்தை பெருக்க குளங்களில் மீன் வளர்ப்பு

திருத்துறைப்பூண்டி, டிச.31: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் நிதி ஆதாரத்தை பெருக்க ஊராட்சிக்கு சொந்தமான குளங்களில் தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் மீன்கள் வளர்க்க திட்டமிடபட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கொக்கலாடி ஊராட்சியில் 9 குளங்களில் 17,500 மீன்குஞ்சுகள் குளத்தில் விடும் நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் வசந்தன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு பணியை துவக்கி வைத்தார். இதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மனுநீதி சோழன், கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், கவுன்சிலர் சுரேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : area ,Thiruthuraipoondi ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...