பெரிய கோயிலில் ஆருத்்ரா தரிசனம் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்

தஞ்சை, டிச. 31: தஞ்சையில் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட விரிவடைந்த நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. துணை தலைவர் ராமையன் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் நலவாரிய பிரச்னை குறித்து மாவட்ட செயலாளர் தில்லைவனம் பேசினார். கூட்டத்தில் கட்டுமான நலாவாரியத்தில் ஆன்லைன் குறைகளை சரி செய்ய வேண்டும். உதவி தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட தலைவர் சேவையா, தெரு வியாபாரிக்ள நலச்சங்க செயலாளர் முத்துகுமரன், நுகர்பொருள் வாணிப கழக சங்கம் தியாகராஜன், பாலையன், உடலுழைப்பு சங்கம் சுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செல்வராஜ் நன்றி கூறினார்.

Related Stories: