×

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் பழுது சீர் செய்யப்பட்டது: தமிழ்நாடு அரசு விளக்கம்!

 

சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் சாலை பகுதி பழுதடைந்துள்ளதாக ஆங்கில நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. மழையினால் ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக சீரமைத்தல் தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை, கோயம்பேடு மேம்பாலம் உள்வட்ட சாலையில் கி.மீ. 7/4 – 7/10 (SH-2)-இல் அமைந்துள்ளது. இந்த உயர்மட்ட பாலம் போக்குவரத்திற்கு பாதுகாப்பாக உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்டுத்துகின்றன. இந்த சாலையின் மேம்பாலத்தில் Wearing Coat Concrete-இல் அமைக்கப்பட்டுள்ளது.

29.10.2025 நாளிட்ட ஆங்கில நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஒன்றில் சென்னை கோயம்பேடு மேம்பாலம் பழுதடைந்துள்ளதாகவும், போக்குவரத்திற்கு பாதுகாப்பாக இல்லை என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாலத்தின் மேற்பகுதியில் உள்ள Concrete Wearing Coat சில இடங்களில் தேய்மானத்தின் காரணமாக சிறிய பழுதுகள் எற்பட்டுள்ளது. அந்த பழுதுகளை தலைமைப் பொறியாளர் (நெ). க(ம)ப அவர்கள் ஆய்வு செய்து பழுதுகளை உடனடியாக சீர் செய்ய உத்தரவிட்டதின் பேரில் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

 

 

Tags : Chennai ,Tamil Nadu government ,Chennai Koyambedu ,Chief Engineer ,Highways Department's Construction and Maintenance Unit ,
× RELATED மதவெறி கும்பலை விரட்ட போராடுவோம்: தமிழகம் முழுவதும் போஸ்டர்