புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது கலெக்டர் உத்தரவு

தஞ்சை, டிச. 31: தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே லண்டனில் இருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 2 பேர், தஞ்சையை சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் தேசிய ஆய்வு மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தஞ்சையை சேர்ந்த நபரின் குடும்பத்தினர் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் லண்டனில் இருந்து திரும்பிய நபர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லையென கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>