மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் இழப்பீடுதொகை

திருமயம், டிச.31: திருமயம் அருகே மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு மின்சாரதுறை சார்பில் ரூ.5லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சிவபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுபற்றி நமணசமுத்திரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரணம் கேட்டு முறையிட்டனர். இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணிக்கம் குடும்பத்திற்கு மின்சாரதுறை மூலம் ரூ.5 லட்சத்தை புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் வழங்கினார். அப்போது செயற்பொறியாளர்கள் மயில்வாகனன், ஆனந்தாயி, உதவி செயற்பொறியாளர்கள் ராமநாதன், சங்கீதா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories:

>