தமிழ்மாநில அரசு பணியாளர் சங்க தினம்

புதுக்கோட்டை, டிச.31: ஆலங்குடி பேரூராட்சியில் தமிழ்மாநில அரசு பணியாளர் சங்க துவக்க நாள் கொண்டாடப்பட்டது. தமிழ்மாநில அரசு பணியாளர் சங்கத்தின் ஸ்தாபக தினம் ஆலங்குடி பேரூராட்சியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில துணைதலைவர் கனகமுத்து முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் 2021 நாட்காட்டி வெளியிடப்பட்டது. அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாட்காட்டி, இனிப்பு மற்றும் சோப்பு வழங்கப்பட்டது. முடிவில் பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories:

>